அ.தி.மு.க.,வில் பழனிச்சாமி அணியினருக்குப் போட்டியாக, தினந்தோறும், புதுப் புதுப் பொறுப்பாளர்களை நியமித்து, அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலரான தினகரன். இதனால் தினகரன் ஆதரவு பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
*சட்டம் ஒழுங்கு பிரச்னை*
இதனால், தமிழகம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், இந்தத் தகராறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கட்சியின் அமைப்புச் செயலராக, குடவாசல் எம்.ராஜேந்திரனை, தினகரன் நியமிக்க, அவர் மற்றும் அவரது மகன் கோவன் ஆகியோர் சேர்ந்து, பழனிசாமி அணியைச் சேர்ந்த நகரச் செயலரை அடித்து நொறுக்கியதோடு, நகரத்தில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.இதையடுத்து, இந்த பிரச்னை திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, திருத்துரைப்பூண்டி பகுதிகளில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
*முன்னாள் அமைச்சர்களை வளைக்கும் தினகரன்*
அ.தி.மு.க.,வில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் 19 பேரும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யா சாகர் ராவிடம் மனு அளித்து விட்டு, அவர் நடவடிக்கை எடுப்பார் என காத்திருக்கின்றனர்.இந்நிலையில், பழனிச்சாமி-பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வேறு சில எம்.எல்.ஏ.,க்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில், தினகரன் மற்றும் திவாகரன் தரப்பினர் தீவிரமாக களம் இறங்கி செயல்பட்டு வருகின்றனர்..இதையறிந்து, அவர்கள் இருவரையும் தங்கள் பக்கமே தக்கவைக்கும் முயற்சியில், பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் ஈடுபட்டுள்ளனர்.