வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையங்களில் பணி!


திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வட்டாரங்களில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களில்
காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,605

வயது வரம்பு: அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பணியாளர்கள் பதவிகளுக்கு வயது 25 – 35-க்குள் இருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு 40 – 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். திருமணம் செய்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.08.2017

மேலும் விவரங்களுக்கு http://www.nellai.tn.nic.in/pdf/icdspressnews_10-08-2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...