சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தின் 125-வது ஆண்டு விழா வக்கீல்கள் சேமநல நிதி ரூ.7 லட்சமாக உயர்வு!!


பாரம்பரியமிக்க சென்னை ஐகோர்ட்டு கட்டிடம் 1892-ம் ஆண்டு கட்டப்பட்டது.


125-வது ஆண்டு விழா

இந்த கட்டிடத்தின் 125-வது ஆண்டு விழா, ஐகோர்ட்டு வளாகத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இதையொட்டி, புதுப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு கட்டிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கம், அருங்காட்சியகத்தை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்து பார்வையிட்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

எடப்பாடி பழனிசாமி

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

நீதி என்பது மக்களுக்கு அரசியலமைப்பு சாசனம் அளிக்கும் உரிமை. பொதுமக்களின் நம்பிக்கையின் இருப்பிடம் நீதித்துறை. நமது நாட்டின் நீதி முறைகள் உலகத்திலேயே பழமையானவை.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய ஐகோர்ட்டுகள் சட்டம் -1861 என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, விக்டோரியா மகாராணியால் வெளியிடப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் மெட்ராஸ் ஐகோர்ட்டு 1862-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த கட்டிடம் 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் இந்தோ-சார்செனிக் முறையில் 1892-ல் ஹென்றி இர்வின் என்பவரின் வழிகாட்டுதலின்படி கட்டப்பட்டது.

சுதந்திரமான செயல்பாடு

இந்த கட்டிடம் 1892-ம் ஆண்டு ஜூலை 12-ந்தேதியன்று தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே சென்னை ஐகோர்ட்டு கட்டிடம்தான் மிகச்சிறந்தது என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாக இந்த கட்டிடம் திகழ்கிறது.

இங்கு மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக் கம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த கலங்கரை விளக்கம் மெரினா கடற்கரைக்கு மாற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு பாரபட்சமின்றி நீதி வழங்கும் அமைப்பாக இன்று வரை செயல்பட்டு வருவது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும்.

இந்திய அரசியலமைப்பில் நீதித்துறை, ஆட்சித்துறை, சட்டமன்றம் ஆகிய மூன்றும் தங்கள் எல்லைக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழமுடியும். நமது மாநிலத்தை பொறுத்தவரை இம்மூன்று பிரிவுகளும் சுதந்திரமாக செயல்படுகின்றன.

419 புதிய கோர்ட்டுகள்

சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை கட்டிடங்கள் கட்டுவதற்கு 56 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் அமைப்பதற்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி தொடங்கப்பட்டு இருக்கிறது. மாற்றுத் தீர்வு மையம் உருவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக அரசு 2011-12 முதல் 2016-17 வரை 6 ஆண்டுகளில் மாவட்டம் மற்றும் கூடுதல் மாவட்ட கோர்ட்டுகள், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டுகள் மாநகர உரிமையியல் கோர்ட்டுகள், சார்பு கோர்ட்டுகள், மகளிர் கோர்ட்டுகள் உள்பட 33 வகையான 419 புதிய கோர்ட்டுகளை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கி உள்ளது.

சேமநல நிதி உயர்வு

சென்னை ஐகோர்ட்டின் பெயரை தமிழ்நாடு ஐகோர்ட்டு என்று மாற்றியமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

சேமநல நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று வக்கீல்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சேமநல நிதியை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5¼ லட்சம் ரூபாயாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயர்த்தி அறிவித்தார். அதன்படி அந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சேமநல நிதி 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை பெறுவதற்கு சேவை கால வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நீதிபதி ஆர்.பானுமதி

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ‘முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது சென்னை ஐகோர்ட்டின் பாரம்பரிய கட்டிடத்தை புதுப்பிக்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தார். அதன்படி தற்போது இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. ஜெயலலிதாவை பின்தொடர்ந்து பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது’ என்றார்.

விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.பானுமதி பேசும் போது, மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு கட்டிடத்தை பாரம்பரியம் மாறாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றும், இந்த ஐகோர்ட்டு பி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...