புதுடில்லி: பினாமி சொத்து வைத்திருப்பவர்கள் குறித்த தகவலை தருபவர்களுக்கு ரூ. 1 கோடி
பரிசு தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு , நாட்டில் ஊழல், மற்றும் கறுப்பு பணத்தை ஒழித்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கு கொண்டு வருகிறது. வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களுக்கு கடுமையான சட்டங்கள் மூலம் ‛‛ செக்' ' வைத்தது.இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் பினாமி ஒழிப்பு சட்டத்தை கொண்டு வந்தது. நவம்பரில் அமல்படுத்தியது.இந்நிலையில் பினாமி சொத்துக்களை வைத்திருப்பவர்கள் குறித்த தகவல் தருபவர்களுக்கு ரூ.
1கோடி பரிசு தரும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 1 கோடி பரிசு இது தொடர்பாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தில் கூறியதாவது, பினாமி ஒழிப்பு சட்டத்தில் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது இதன் படி பினாமி சொத்து வைத்திருப்பவர்கள், வங்கி டிபாசிட் பணம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துக்கள் , முதலீடுகள் குறித்த தகவல்களை தெரிந்த பக்கத்து வீட்டில் வசிப்பவரே தகுந்த ஆதாரத்துடன் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, பொருளாதார புலனாய்வு பிரிவு ஆகிய துறைகளிடம் தெரிவிக்கலாம்.
இதற்காக அவர்களுக்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். தகவல் உண்மையாக இருந்தால் உரிய சன்மானம் வழங்கப்படும்.. தகவல் தருபவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 15 லட்சம் எனவும் அதிகபட்சமாக ரூ.
1 கோடி வரை பரிசாக வழங்கப்படும்.. தகவல் கொடுத்தவரின் விவரம் ரகசியம் காக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. நிதித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டால், வரும் அக்டோபர், அல்லது நவம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளி வரும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.