📌📌📌📌📌📌📌📌
*பேரா.நா.மணி அவர்களது முகநூல் பதிவு*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
__________****____________
நண்பர்களே! வணக்கம்.
நான் உறுப்பினராக அங்கம் வகிக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றது. அன்று முதல் எல்லா நாட்களிலும் போராட்டத்தில் பங்கேற்றேன். காத்திருக்கும் போராட்டத்திலும் பங்கேற்றேன்.ஒரு வேளை எங்கள் சங்கம் போராட்டத்தில் பங்கேற்க இயலாத சூழல் உருவாகும் எனில், அதே செப்டம்பர் 12 ல் நான் தனியாக வேனும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று எங்கள் கல்லூரிக் கிளையின் தலைவரிடம் சொல்லி இருந்தேன். நான் 27 ஆண்டுகள் பணி முடித்து இருக்கிறேன். எனது மனைவி இருபது ஆண்டுகள் பணி முடித்து உள்ளார். 2003 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்
போராட்டத்தில் முழுமையாக பங்கு பெற்றவர்கள். இந்த உரிமையோடு நடந்து முடிந்த தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போராட்டம் குறித்த உடனடியான தனிப்பட்ட மதிப்புரை இது.
1}அரசு என்பது ஓர் கொடிய ஒடுக்குமுறைக் கருவி. இத்தகைய அரசை எதிர்த்து அதற்கு சவால் விட்டு ஒரு போராட்டத்தில் இறங்குவது ஓர் அசாதாரண நிகழ்வு. அத்தகைய அரசை எதிர்க்கும் போராட்டம் முடிந்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீண்டும் பணிக்கு திரும்புதல் முதல் வெற்றி. அது இந்தப் போராட்டத்தில் சாத்தியமாகி இருக்கிறது.
2} பொதுவாக இத்தகைய போராட்டங்களில் நீதிமன்றத்தின் இடையீடு ஆரோக்கியமானது அல்ல. நீதிமன்றம் தலையீட்டால் ஒரு பிரச்சினையின் தன்மை எப்படியெல்லாம் மாறுகிறது என்று அறுதியிட்டு கூற இயலாது. ஒரு பிரச்சினைக்கான கடைசிப் புகலிடமாக சில நேரம் நீதிமன்றம் இருக்கலாம். முதல் தேர்வாக இருக்கமுடியாது.ஒரு அனுபவம் மிக்க உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சொன்னார். நீதிமன்றம் செல்வது பெருமைக்கு எதையோ மேய்ப்பதற்கு சமம் என்றார்.
3).நீதிமன்றத்தின் இடையீட்டால் தள்ளி வைக்கப்பட்ட போராட்டத்தின் வெற்றி தோல்வி பற்றி பேசுவது அறிவுடைமை ஆகாது.இருந்தபோதும் இந்த நீதிமன்றத்தின் இடையீடு மிகுந்த பலவீனமான ஆனால் அரஜகவாதியாக இருக்கும் அதிமுக அரசின் தலைமைச் செயலாளரை ஆஜராக உத்தவிட்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் நேரில் அமர்ந்து பேசியிருந்தாலும் நடக்காத அல்லது எதிர்பாராத விளைவிகளை உருவாக்கலாம். பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுதவிர எதனையும் அறுதியிட்டு தற்போதைய நிலையில் கூற இயலாது. ஆனால் நம் கண் முன்னால் இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம், போராட்ட களத்தில் நாள்தோறும் அதிகரித்து வந்த போர்க்குணம், நாளுக்குநாள் போர் படையில் இணைந்து போராட்ட வீச்சை அதிகரித்துக் கொண்டே இருந்த சங்கங்கள், போராட்டக்காரர்கள் ஆகியவையே.
4} போராட்டத்தின் பிரதான வெற்றியாக நான் கருதுவது, இளைஞர்கள் போராட்ட குணம் இல்லாதவர்கள், போராட விரும்பாதவர்கள் என்பதை உடைத்து எறிந்து இருக்கிறார்கள். வருங்கால அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சமூகத்தின் மீது ஒரு பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது.
5}14 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சமூகத்திற்கு அன்றைய பாஜக அரசு இழைத்த மாபெரும் துரோகமான புதிய பென்சன் திட்டத்தை ஒழித்து பழைய பென்சன் திட்டத்தை மீட்டெடுக்கும் முகவுரை இந்தப் போராட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. இனி எந்த ஒரு மோசமான ஒடுக்குமுறை அரசையும் அசைத்து பழைய பென்சன் திட்டத்தை மீட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
6} அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களில் 'இது காட்டிக் கொடுக்கும் சங்கம், இது போராட்டத்திற்கு வந்து கையோடு திரும்பி ஓடும் சங்கம'் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு பட்டியல் இருக்கிறது. ஆனால் அதில் இது வரை ஒரளவு நம்பத் தகுந்த சங்கம் என்ற நம்பகத் தன்மையைத் தகர்த்து, அம்பலப்பட்டு சில சங்கங்கள் நிற்கிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உண்மையான தோழன் யார்? எந்த சங்கத்தில் நம்பிக்கையோடு இணைவது செயல்படுவது என்ற எதிர்காலத் திசை வழியை தேர்வு செய்யும் வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது.
7} மிக வலுவான சக்தி மிக்க ஒரு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் நீட் போன்ற ஒரு பொது பிரச்சினையை இணைத்தது புதிய வரலாறு. இனி வரும் காலங்களில் இவர்கள் இது போன்ற பொதுப் பிரச்சினைகளை தமிழக தொழிலாளி வர்க்கம் முன்னெடுக்கும் என்பதை கட்டியம் கூறும் போராட்டம். இடைக்கால நிவாரணம் எப்படியும் இந்த நீதிமன்றத்தின் இடையீடு வழியே கூட வரவாய்ப்பு இருக்கிறது. அது புதிய ஊதிய விகிதங்களுக்கு வழி வகுக்கும்.
மொத்தத்தில் இந்த போராட்டம் மாபெரும் வெற்றிகளுக்கான துவக்க கட்ட வெற்றி.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களுக்கும் இதனை நாடி பிடித்து வழிநடத்திய தோழர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வீர வணக்கம் அனைவருக்கும்.
பேரா.நா.மணி, பொருளாதாரத் துறை தலைவர், ஈரோடு கலைக் கல்லூரி, ஈரோடு.