வருகை பதிவேடு: மாணவனுக்குக் கன்னத்தில் 40 அறை!


லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் வருகை பதிவேடு பரிசோதனையின்போது எழுந்திருந்து
உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் உள்ள செயின்ட் ஜான் வைத்யன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் புதன்கிழமை( ஆகஸ்ட் 31) வீட்டுக்குத் திரும்பியபோது, கன்னம் வீங்கிக் காணப்பட்டிருந்தது. இதையடுத்து, குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியை தன்னை அடித்ததைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பள்ளியில் மற்ற குழந்தைகளிடம் விசாரிக்கும்போது, வருகை பதிவேடு பரிசோதனையின்போது, ரித்தீஷ் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். ஆசிரியை அவனது பெயரை அழைத்தபோது, எழுந்திருந்து பதிலளிக்காத காரணத்தால், அவனது கன்னத்தில் 40 முறை அடித்தார். பின்பு, ரித்தீஷ் மயக்கம்போட்டு தரையில் விழுந்தபோது, ஆசிரியை வகுப்பறை விட்டுச் சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகம் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதனை செய்தபோது, ஆசிரியை ரிதிகா வி ஜான் குழந்தையை அடித்தது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையின் பெற்றோர் புகாரின்பெயரில் ஆசிரியை மீது போலீஸ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...