நீட்'-ஐ எதிர்த்து பதவி விலகிய அரசு ஆசிரியை!!


திண்டிவனம்: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,
அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

போராட்டம்:

மதுரையை சேர்ந்தவர் ஜெயகாந்தன். இவரது மனைவி சபரிமாலா, 34; திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஊராட்சி. ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தனது ஏழு வயது மகன் ஜெயசோழனையும், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.இந்நிலையில், நேற்று (செப்.,6) காலை 9:15 மணியளவில், பள்ளிக்கு வந்த சபரிமாலா, பணியை புறக்கணித்து விட்டு, தனது மகன் ஜெயசோழனுடன், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்தக் கோரியும், பள்ளி வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். கோரிக்கை வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன் ஆசிரியை நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய வெள்ளிமேடுபேட்டை போலீசார், போராட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என, அறிவுறுத்தினர். இதை ஏற்று, மதியம் 1:00 மணியளவில், சபரிமாலா, தனது போராட்டத்தை கைவிட்டார்.

ராஜினாமா:

இந்நிலையில், அவர் இன்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதிவாணனை சந்தித்த சபரிமாலா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.தொடர்ந்து அவர் கூறுகையில், அரசு பணியில் இருப்பதால் சமூக பணிகளில் ஈடுபட முடியவில்லை. இதனால் பதவியை ராஜினாமா செய்தேன். கிராமந்தோறும் சென்று படிக்காத இளைஞர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாகவும் கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...