பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில சங்கங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன. ஜாக்டோ அமைப்பை சேர்ந்த 10 சங்கங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 56 அரசு ஊழியர் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.போராட்டம் தொடர்பாக நிர்வாகி ஒருவர் கூறுகையில், இன்று போராட்டத்தில் பங்கேற்காத சங்கங்கள் நாளை பங்கேற்கும். பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஊழியர்கள் ஏமாற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார்.சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, அரியலூர், திருச்சி, கரூர், நெல்லை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பேரணியாக சென்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாசில்தார் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மானாமதுரையில், சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
தேவக்கோட்டையில், மண்டல துணை தாசில்தார் மாணிக்கவாசகம் தலைமையில் 54 பெண்கள் உட்பட 107 பேர் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே சாலைமறியலில் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 107பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வேலை நிறுத்தம் காரணமாக பள்ளிகளில் பெருமளவு பாதிப்பு இல்லை. அதேநேரத்தில் அரசு அலுவலகங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது