ஓட்டுபோடுவதைகட்டாயமாக்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து!!


தேர்தலின்போது ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில்
பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில் நாடுகளில் தேர்தலில் ஓட்டுப்போடுவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கட்டாயமாக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், “கொள்கை முடிவு எடுக்கும் பணியை பாராளுமன்றம் செய்கிறது. இந்த சட்ட அமைப்பின் பணிகளில் எங்களுக்கு நம்பிக்கையும் இருக்கிறது. எனவே ஓட்டுபோடுவதை கட்டாயமாக்கவேண்டும் என்று எங்களால் பாராளுமன்றத்துக்கு உத்தரவிட முடியாது. அதேநேரம் இது தொடர்பான பொது நல மனுவை விசாரிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசை எங்களால் கேட்டுக்கொள்ள இயலும்“ என்றனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 79–ன் பிரிவு டி ஒருவருக்கு ஓட்டுப்போடும் அல்லது வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை அளிக்கிறது. 2013–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை வாக்காளர் தெரிவிக்க ‘நோட்டா‘ வசதியும் சேர்க்கப்பட்டு உள்ளது“ என்றார். இதையடுத்து, இது தொடர்பாக விரிவான விசாரணை தசரா விடுமுறைக்கு பிறகு நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...