மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் ரயில் மறியல் !!

*சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.*

*சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.*

*சென்னையில் மருத்துவ கலந்தாய்வு நடக்கும் இடம் அருகே மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.*


*அண்ணாசாலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.*

*அண்ணாசாலையில் அமர்ந்து அமர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.*

*மத்திய அரசு உடனே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.*

*மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய பாஜக அரசே காணரம் என்று முழக்கமி்டு வருகின்றனர்.*

*அண்ணாசாலையில் நடக்கும் போராட்டத்தால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.*

*மருத்துவக்கல்வி இயக்கம் எதிரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்*

*#விழுப்புரம்*

*விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.*

*#திருவாரூர்*

*திருவாரூர் கொரடாச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*

*#புதுச்சேரி*

*புதுச்சேரியில் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.*

*கோவையில் போராட்டம் மற்றும் ரயில் மறியல்*

*மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கோவையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.*

*மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாணவர்கள் கண்டன முழக்கமிட்டு வருகின்றனர்.*

*கோவையில் மாணவர் அமைப்பினர் ரயில் நிலையம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.*

*மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...