பெற்றோர்களுக்கு நீதிபதி சூடு...


_துள்ளித் திரிந்து விளையாட வேண்டிய சிறு வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி
அவர்களின் குழந்தை பருவத்தை வீணடித்து விடுகிறோம் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்._

*சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, முதல் வகுப்பிலே எட்டு பாடங்கள் இருப்பதாகவும் எனவே அதனை குறைக்கக்கோரியும் வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.*

_இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவு:_

*பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு 4 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.*

_நீதிபதி கிருபாகரன் பெற்றோர்களுக்கு சூடு வைப்பதை போல் இரு கருத்துகளை கூறினார்._

*துள்ளித் திரிந்து விளையாட வேண்டிய சிறு வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, அவர்களின் குழந்தை பருவத்தை வீணடித்துவிடுகிறோம்.*

*தனிக்குடித்தனம், பணம் சம்பாதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக குழந்தைகளை சிறு வயதில் பள்ளிக்கு அனுப்பி அவர்களின் விளையாட்டு நேரத்தை வீணடித்துவிடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...