உள்ளாட்சி தேர்தல் வழக்கு: ஐகோர்ட் இன்று தீர்ப்பு!!


உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில்
, வரும், இன்று(செப்.,4) தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு:

தமிழகத்தில், 2016 அக்டோபரில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது. இதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.

திமுக., மனு:

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களது பதவிக் காலத்தை நீட்டிக்க கூடாது எனவும், 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், நாராயணன், மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தக் கோரி, தி.மு.க., தரப்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இன்று தீர்ப்பு:

மனுக்களை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. இவ்வழக்கில், கடந்த 1ம் தேதி(செப்.,1) தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்துக்கு, தலைமை நீதிபதி வராததால், அன்று தீர்ப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று(செப்.,4) தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...