தமிழகத்தின் புதிய நிரந்தர கவர்னராக கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்த விலகினார்.
உ.பி., மாநிலத்தை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா, அமைச்சரவையில் இருந்து விலகியதை அடுத்து, தமிழகத்தின் நிரந்தர கவர்னராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியா திரும்பியதும் கல்ராஜ் மிஸ்ரா நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது