இன்று மாலை மீண்டும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் !!

+நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.*

*இந்நிலையில் இன்று மாலை ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


*மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இக்கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

*இக்கூட்டத்தில் ஐகோர்ட் இன்று பிறப்பிக்கும் உத்தரவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.*

*நேற்றைய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின் போது, மறு உத்தரவு வரும் வரை திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. *
*இதனால் ஐகோர்ட் உத்தரவு திமுக.,விற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இன்று மாலை நடக்கும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...