பள்ளிக்கல்வியை மேம்படுத்த, மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு விலையில்லாமல்
அனைத்தையும் இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கிறது என்று தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் செப்டம்பர் 05 ஆம் தேதி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு மாணவர்கள் நலனில் அதீத அக்கறைக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் விதமாக மாணவர்கள் அனைவருக்கும் அனைத்தையும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும், தான் படிக்கின்ற காலகட்டத்தில் இவ்வளவு வசதிகள் இல்லையென்றும், தற்போதைய காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் மாணவர்களுக்கு அனைத்தும் தற்போது இலவசமாகக் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
