பொதுத்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் கே.சண்முகம் கூறியுள்ளதாவது: "கடந்த ஆண்டில் (2016-17) அரசு ஊழியர்களுக்கு 8.33 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு 1.67 சதவிகிதம் கூடுதலாக வழங்கப்படும். இந்த போனஸ் தொகை வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும்" என்று கூறினார்.
தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களான, தமிழ்நாடு குடிமைப்பணியாளர்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினர், பூம்புகார் கப்பல் கார்ப்பரேசன் ஊழியர்கள், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டப் பணியாளர்கள், தமிழ்நாடு தோட்டக்கலைப் பணியாளர்கள் மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேசன் ஊழியர்கள் ஆகியோருக்கு போனஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
போனஸ் சட்டம் 1965ன் படி ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போனஸ் வழங்கப்படவேண்டும். ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் பொதுத்துறை ஊழியர்களுக்கான போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.