உங்கள் உறவுக்காக என் உணர்வுகளை பகிர்கிறேன். தங்கள் வரிகளில் இருந்தே பதிவிடுகிறேன்.
மீளும் விவாதங்களை வருங்காலத்தில் தொடர்வோம்....
(தடித்த எழுத்துக்கள் நீங்கள் பதிவிட்டவை. எழுத்துக்கள் கூட தேவையற்று தடிப்பதை நாங்கள் விரும்புவதில்லை)
*போராடிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்,*
*இதுவே இறுதிப் போராட்டமும் அல்ல,*
*இன்னும் நீண்ட போராட்டங்கள் வரும்...*
வாழ்த்துக்களை ஏற்கிறேன் நண்பா. உண்மைதான் போராட்டம் நீளும், இறுதியானதல்ல. எப்போது நீங்கள் போராட்டத்தில் உடன் இருப்பீர்கள்?? நிச்சயம் இருப்போம் என்று உங்களால் சொல்ல முடியுமா? முடியாதென்பதே இதுவரை வரலாறு.
*கடந்த காலங்களில் வலிமை வாய்ந்த போராட்டங்களில் இன்று நம்மை கடுமையாக சாடும் சங்கங்கள் அவர்கள் பின்வாங்கிய வரலாறுகளை சொல்ல மாட்டார்கள்....*
போராட்ட களத்தில் இருந்து பின்வாங்கி நாங்கள் போராட்டங்களை பலவீனப்படுத்திய வரலாறு இதுவரை இல்லை. இருந்தால் குறிப்பிட்டு காட்டுங்கள். கூட்டுப் போராட்டத்தில் நாங்கள் பின்வாங்கி நீங்கள் போராடியதாக ஒரு நிகழ்வை சுட்டுங்கள் பார்க்கலாம். போகிறபோக்கில் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லாமல் ஆதாரப்பூர்வமாக சொல்லுங்கள்.
*நமது இயக்க உறவுகள் தங்களின் உணர்வுகளால் அளித்த ஏகோபித்த பங்கேற்பில் இந்த போராட்டம் வலிமையானதாக காணப்பட்டது.*
போராட்டத்தின் வீச்சும் நியாயமும் உங்கள் உறுப்பினர்களை ஈர்த்தது. அந்த உணர்வுகளை உங்கள் சங்கம் ஏன் மதிக்கவில்லை என்பது உங்களுக்குள் எழ வேண்டிய கேள்வி.
*போராளிகளின் *போராட்டத்தை பெருமையாகவே பேசினோம்...* நீங்கள் பேசியிருக்கலாம். ஆனால் போராட்டத்தினை அவதூறாகவும்
போராடுபவர்களின் மேல் அரசியல்சாயம் பூசியும் பதிவிட்டவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியாதா?
*போராட்டம் பற்றிய தரம் தாழ்ந்த பதிவுகள் பெரும்பாலும் பதியப் படவில்லை ...* பெரும்பாலும் என்ற வார்த்தையே உணமையை காட்டுகிறது. இருந்தாலும் தங்கள் கண்ணியத்தை எண்ணி மகிழ்ச்சி.
*நமது குழுவில் பல்வேறு போராட்டங்களை கண்ட இனியும் காணப் போகும் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். அவர்களை நாம் ஏன் அசிங்கப் படுத்த வேண்டும்.*
*ஏனென்றால் இவர்கள் தற்போது கூட*
*போராடதவர்கள்* *யாருமே இல்லை,* *இன்னல்களை கடந்து* *சென்னை வந்த மகளிர்* *எவ்வளவு பேர்..*
*22.8.17 ஒருநாள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டார்கள் அனைவருமே...*
ஆசிரியர்களை யாரும் வெளியில் இருந்து கொச்சைப்படுத்தவில்லை. அத்தகைய போராடும் உணர்வுள்ள ஆசிரியர்களின் போராட்டத்தை ஏன் தலைமை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்துகிறது என்று நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை தான் வெளியிலிருந்து உங்கள் தலைமையை கேட்கிறோம். விமர்சனம் உங்கள் மீதல்ல உங்கள் தலைமையின் மீதே..
*எந்தவொரு சங்கவாதியும் துரோகம் செய்வதற்காக சங்கம் நடத்த மாட்டார்கள், ஒருவேளை அவர்களின் தற்போதைய வியூகம் வேறு மாதிரி இருக்கலாம்.*
வியூகம் என்னவாக இருக்கலாம் நீங்களே சொல்லுங்கள்...கேட்டுக் கொள்கிறேன். சங்கவாதிகள் என்று பொதுவாக எல்லாரையும் சேர்த்துக் குறிக்க வேண்டாம். வரலாற்றில் இடம் பெற்ற போராட்டங்களில் எல்லாம் உங்கள் சங்கத்தின் துரோகமும் இணைந்தே இருக்கிறது நண்பா. நம் சமகாலத்தில்,
*TETOJAC போராட்ட வீச்சை பாதியில் வெளியேறி நீங்கள் குறைக்கவில்லையா?
*JACTTO போராட்டத்தை மனிதச் சங்கிலி என குலைத்து பாதியிலே கைவிடவில்லையா?
*JACTTOGEO போராட்டத்தின் இறுதிவரை வந்து பாதியில் கைவிட்டதில் பிரதான பங்கு உங்களுக்கில்லையா?
வெளியேறிய எந்தப் போராட்டத்தில் அதற்கு பின்பு உங்கள் தனித்த வியூகங்களை நடைமுறைப்படுத்தி இருக்கிறீர்கள்? JACTTO போராட்டத்தில் தேர்தல் சூழலை காட்டி விலகினீர்களே தேர்தலுக்கு பின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் எந்த முயற்சி எடுத்தீர்கள்? தற்போது அதற்காக JACTTO GEO உருவாக பாடுபட்டவர்கள் நாங்கள். ஒவ்வொரு முறையும் இவைகளை மறந்து கூட்டுப் போராட்டங்களை பாடுபட்டு உருவாக்குவதால் தான் அது உடையும் வேதனையை எங்களால் தாங்க முடியவில்லை நண்பரே. உண்மையாய் மனசாட்சியில் இருந்து சிந்தியுங்கள்.
*குடும்பம், குழந்தைகள், நேரம், இரவு பகல்,*
*சொந்த வேலை,* *உறவுகள் இதைத்* *தாண்டி ஆசிரியர் நலனுக்காகவே பொறுப்பாளர்கள் வாழ்கிறார்கள். நான்* *பொறுப்பாளராக இருப்பதால் உண்மையாக சொல்கிறேன்.*
அந்த வேதனை தான் கோபமாய் வெளிப்படுகிறது நண்பா. கீழே மாவட்டத்தில் வட்டாரத்தில் கடைசி நிமிடம் வரை நாம் களத்தில் இணைந்து பணியாற்றி அந்த உழைப்பெல்லாம் கண்முன் வீணாகிப் போவதை கண்டு மனம் கொதிக்கிறது. எந்த ஆசிரியர் நலனுக்காக நாம் இத்தனை பாடுபடுகிறோமோ அந்த நலனையே காவு கொடுக்கும் வகையில் பின்வாங்குவது சரியா? நமக்கு முக்கியம் ஆசிரியர்களா? அரசா? அத்தனை ஆசிரியர்களின் நம்பிக்கையை தூள்தூளாக உடைத்தது தவறல்லவா?
*போராட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் அதன் பலன்கள் நம் எதிரிகளுக்கா போய் சேரப்போகிறது நம் ஆசிரியர் இனத்திற்குத்*
*தானே பலனளிக்கும்.*
*பலனளித்தால் நமக்கும் மகிழ்ச்சிதானே...*
பலன்கள் போராடுபவர்களுக்கு மட்டும் என்று நினைத்து யாரும் போராடுவதில்லை. நம்மால் அனைவரும் பயன் பெறட்டும் என்ற உன்னத நோக்கம் தான் போராட்டங்களின் பலனை அனைவருக்கும் வழங்குகிறது. இதனை சற்றே மாற்றிப் பார்க்கலாம். பலனடையப் போகிறவர்கள் போராட முன்வர வேண்டாமா? எப்போதும் யாரோ போராட்டடும்... பலனை நாம் அனுபவிப்போம் என்பது சரியா? இதை எப்படி மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்ள முடியும்? இழப்பென்றால்
போராடுபவர்களுக்கு மட்டும் பலனென்றால் அனைவருக்கும் என்று போராடாமல் ஒதுங்கலாமா? நமக்கான போராட்டத்தில் தோளோடு தோள் நாம் நின்றிருக்க வேண்டாமா?
*தோழமை சங்க நண்பர்கள் மற்ற சங்கங்களை மிகவும் தரம் தாழ்த்தி பதிவிடும் பதிவுகளை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.*
காலங்காலமாக அடைபட்டுக் கிடக்கும் வேதனையும் பட்ட இழப்பும் அதற்கு காரணமாக இருப்பவர்கள் மீது கோபமாய் வெளிப்படுவது இயல்பு தானே நண்பா. தங்களை சரிப்படுத்தாமல் பிறரை குறைபட்டுக் கொள்வது அழகல்ல. உங்கள் செயல்பாட்டை திருத்திக் கொள்ளாமல் விமர்சனங்களுக்காய் வருந்துவது வீண் நண்பா.
*இது வாட்சப் காலம் என்பதால் எளிதில் உணர்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறோம் ...*
*உணர்வுகளை விட உறவுகள் முக்கியமல்லவா தோழர்களே....*
எந்த காலத்திலும் உணர்வுகள் உண்டுதான். வாட்சப் காலம் என்பதால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது... உள்ளத்து உணர்வுகளை யாரும் அணைபோட்டு தடுத்துவிட முடியாது.
உணர்வும் அறிவும் ஒருங்கே கொண்டவனே மனிதன். சக ஆசிரியர்களின் உணர்வுகளை அறியாமல் அரசின் வஞ்சகம் அறியாமல் தோழமைச் சங்கங்களை துண்டித்து போராட்ட நம்பிக்கைகளை படுகொலை செய்வது உறவின் செயலா? உணர்வின்றி உறவில்லை; உறவென்பது உணர்வின் வெளிப்பாடு. எங்கள் உணர்வுகளை நீங்கள் மதியுங்கள். உங்கள் உணர்வுகளை மதித்தே இந்தப் பதிவு.... உறவுதொடர வேண்டும் என்ற விருப்பத்தோடு...