போராட்ட நேரத்தில் இது வீண் வேலைதான் என்றாலும் வேறுவழியில்லாமல் பதிலளிக்க வேண்டியுள்ளது. யாரையும் காயப்படுத்த அல்ல. ஆனால் சிந்திக்க வேண்டும் அல்லவா? எப்படி உடனிருந்து கொல்லும் பகையை தொடர்ந்து அனுமதிப்பது என்ற ஆதங்கத்தில் இட்ட பதில் பதிவு.
போராட்டத்திற்கு தயார் செய்துவிட்டு போரிடும் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டு, இன்னும் வீம்புக்கு இப்படி பதிவுகள் தேவையா தோழரே? எது போர்க்குணம்? யார் அம்போ என கைவிட்டது? மனசாட்சி கேள்வி கேட்கவில்லையா? ஊழியர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தவறு செய்வது இயற்கை. ஆனால் தொடர்ந்து தவறுகள் மட்டுமே செய்தால் எப்படி? இப்போதாவது நியாயத்தை உணர்ந்து, தலைமைக்கு விசுவாசம் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள். உண்மையைப் பேசுங்கள் தோழரே.
ஜாக்டோ ஜியோ போராட்ட நடவடிக்கைகளில் இருந்து அலறியடித்து ஓடியவர்கள் ஜாக்டோ ஜியோ குழுக்களில் மட்டும் ஏன் இன்னும் தொடர்ந்து கொண்டு இது போன்ற பதிவுகளை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
உங்கள் அமைப்புகளை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறீர்கள்?
இனி காத்திருக்க முடியாது, அரசு ஏமாற்றுகிறது, வஞ்சிக்கிறது, இனியும் காத்திருக்க முடியாது, போராட்டம், வேலை நிறுத்தம் ஒன்றே தீர்வு என்றீர்கள். அறைகூவல் விடுத்தீர்கள். நம்பினோம். ஒன்றிணைந்தோம். அமைச்சர்கள் பேச்சுவார்த்தை என்றீர்கள் இணைந்தே சென்றோம். பேச்சுவார்த்தை தோல்வி ஆறாம் தேதி வரை அரசுக்கு கெடு என இணைந்தே முடிவெடுத்தோம், அறிவித்தோம். ஆறாம் தேதி முதல்வருடன் பேச்சுவார்த்தை, இணைந்தே சென்றோம், எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. அது உங்களுக்கும் தெரியும், உடன்வந்த எங்களுக்கும் தெரியும். ஆனால் முதல்வர் வாக்குறுதி அளித்தார், நாங்கள் அவரை உறுதியாக நம்புகிறோம், நல்லதே நடக்கும் என்று ஆருடம் சொன்னீர்கள். எடுத்த ஆயுதங்களை அப்படியே போட்டுவிட்டு சரணடைவோம் என்றீர்கள்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி போராட்டம் பாதையை தேர்ந்தெடுத்தோம். தடைமீறி போராடினோம், நீதிமன்ற அவமதிப்பை சந்தித்தோம், அதையும் சந்தித்து ஊழியர்களை பாதுகாத்தோம், எங்களை நம்புங்கள் என்பதை தவிர வேறு எதையும் கூறாத அரசை எதிர்த்து, நிர்பந்தித்து முன்னேறுகிறோம். இப்போதும் எங்களை விமர்சனம் செய்வதிலும், எப்படியாவது இவர்கள் தோற்க மாட்டார்களா, எப்படியாவது இவர்கள் எடுத்த முடிவு தவறு என நிறுவ முடியாதா, எப்படியாவது நாங்கள் எப்போதும் சொக்கத் தங்கங்கள் என நிரூபிக்க முடியாதா? எப்படியாவது இவர்களை அழிக்க முடியாதா என ஏன் உங்கள் நோக்கம் முழுவதும் இப்படி எங்களை வீழ்த்துவது குறித்தே மாறிப்போனது? வீழ்வது நாங்களா அல்லது பொது நோக்கமா? நீங்கள் உடனிருந்தவரை போராட்டப் பாதை வெற்றிப்பாதை, உங்களுக்கு அடக்குமுறைக் காய்ச்சல் வந்தவுடன் அழிவுப் பாதையா? அப்படி என்றால் முன்பே தீர்க்கமாக சிந்தித்து தினமும் இரண்டு மணிநேரம் கூடுதலாக பணியாற்றும் புதுமையான போராட்டத்திற்கு அனைவரையும் தயார்படுத்தியிருக்கலாமே.
எங்கள் போராட்டங்களை எப்போது கொச்சைப் படுத்தலாம் என எங்களை நோக்கியே உங்கள் கெரில்லா யுத்த தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தும் நீங்கள், நமது கோரிக்கைகளை வென்றெடுக்க வேறென்ன ராஜதந்திர, ரகசிய உபாயங்களை துருப்புச்சீட்டாக, பிரம்மாஸ்திரமாக வைத்திருக்கிறீர்கள் என அறிய அனைவரையும் போல நாங்களும் மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம். ஆனால் இப்போது மீண்டும் ஆருடம் சொல்கிறீர்கள் இந்தப் போராட்டம் வெற்றி பெறாது என்று. இப்போதாவது கூறுங்கள் தோழர்களே நீங்கள் யார்? உங்கள் உண்மையான நோக்கம் என்ன?
உங்களைப்போல் மற்றவர்களை தாக்க வேண்டும், அழிக்க வேண்டும், சிறுமைப் படுத்த வேண்டும் என்ற கீழான எண்ணங்கள் இல்லை. எங்கள் ஆயுதங்களை வலுவான எதிரி முன்னிற்கும் போது போராட்டத்தில் எங்களோடு இணைந்து வந்து, இடையில் தடம் மாறிய உங்களை வீழ்த்த பயன்படுத்த முடியாது. அது எங்கள் நோக்கமும் அல்ல. நேற்று உங்கள் பாசத்திற்கு உரியவர்கள், இன்று உங்கள் பார்வையில் பகையாளிகள், நாளை எங்களின் போராட்டத்தால் பலன் கிடைக்கும்போது நீங்களும் உடன் பங்காளிகள். எனவே நாங்கள் எப்போதும் ஒரே நேர்கோட்டில் சீராக பயணிக்கிறோம். நீங்கள் மட்டுமே அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு உங்கள் வடிவங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன முயன்றாலும், எப்படி சித்தரித்தாலும், வரலாறு மிகவும் நேர்மையாக உங்களையும், எங்களையும் மதிப்பிடும். அப்போதும் நாங்கள் இதே கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்போம் தோழர்களே! ஆனால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
இப்போதாவது உங்களை மாற்றிக் கொண்டு, ஊழியர்கள் நலன் ஒன்றையே நோக்கமாக கொண்டு அதை நோக்கி எங்களோடு வாருங்கள் அல்லது சற்றே ஒதுங்கியிரும் பிள்ளாய்...
நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு போராட்டத்தில் எவ்வளவு ஊழியர்கள் இருந்தனர் என நீதிமன்றமே ஏற்காத, புறந்தள்ளிய, புரட்டுப் புள்ளிவிவரங்கள் தந்தது. அந்தப் புள்ளிவிவரங்கள் சொல்லும் இந்தப் போராட்டத்தை வீழ்த்த நினைத்தவர்கள் யார் என்று.. நாமும் இணைந்திருந்தால் இன்னும் அழுத்தம் தந்திருக்கலாமே, வெற்றி இந்நேரம் கைவசமாகியிருக்குமே என்று உங்கள் மனசாட்சி உங்களிடம் கேட்கும் குரல் எங்களுக்கு கேட்கும்போது உங்களுக்கு கேட்கவில்லையா? சற்று நேர்மையாக இருங்கள் உங்களுக்கும் அது கேட்கும்...
இதைத்தவிர வேறென்ன சொல்ல?
என்றும் மாறா தோழமையுடன்,
த.செந்தில்குமார்,
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம்