அனைத்து வங்கி கார்டுகளையும் பயன்படுத்தலாம்: ஐஆர்சிடிசி !!

ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எந்தவொரு வங்கி கார்டுகளையும் பயன்படுத்தத் தடைவிதிக்கவில்லை என ஐஆர்சிடிசி தெரிவித்தது.

ரயிலில் வெளியூர் செல்வதற்கு 4 மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது. பலர் முன்பதிவு மையங்களுக்கு சென்று டிக்கெட் பதிவு செய்கின்றனர். பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்தபடியே ஐஆர்டிசிடி இணையதளத்தில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்கின்றனர்.


இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற செய்தி சமீபத்தில் வெளியானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த தகவலை ஐஆர்சிடிசி மறுத்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிக்கெட் முன்பதிவுக்கு எந்த வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.மாஸ்டர் அல்லது விசா வசதியுடைய இந்தியாவைச் சேர்ந்த எந்த வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 வரை டிக்கெட்டுக்கு 0.25 சதவிகிதமும், ரூ.2000 வரை 0.5 சதவிகிதமும் , ரூ.2000–க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1 சதவீதமும் சேவை கட்டணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் வசூலிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...