JACTTO GEO திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதிவுகள் !!!

பின்வரும் செய்தியை அனைத்து whatsapp குழுக்களுக்கும் பகிரவும் !!!
➖➖➖➖➖➖➖➖➖➖
*JACTTO  GEO திருச்சி மாவட்டம் :*➖➖➖➖➖➖➖➖
*2017 போராட்டக் களம் சில சிந்தனைகள் .....*
              *2*
➖➖➖➖➖➖➖➖➖                               *இந்தப் போராட்டத்தில்  நமக்குச் சாதகமாக உள்ளவற்றை இப்போது சிந்திப்போம் ..*
➖➖➖➖➖
1.  *இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு ஊழியர்/ஆசிரியர் கோரிக்கை சார்ந்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது*
➖➖➖➖➖➖➖➖➖
2. *போராட்டத்தை தள்ளிவைத்த சங்கத் தலைவர்களை புறந்தள்ளி உறுப்பினர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வு*
*பாராட்டத்தக்கது*
*பெருமைக்குரியது*

➖➖➖➖➖➖➖➖➖
3. *கடந்த 14 ஆண்டுகளில் (2003க்குப் பிறகு) பணியில் சேர்ந்தவர்கள் முதல்முறையாக ஒன்றுபட்ட , வலிமையான போராட்டத்தில் பங்கேற்பாளர்களாகவும் , பார்வையாளர்களாகவும் இருந்து பல்வேறு அனுபவங்களையும் , போராட்ட உணர்வையும் பெற்றது*
➖➖➖➖➖➖➖➖➖
*பழைய வரலாறுகளையும், தியாகங்களையும் அறிந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது . இதனால் இவர்கள் வருங்காலத்தில் நம்பிக்கையோடும் , மனஉறுதியோடும் தியாக உணர்வோடும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்பார்கள் என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது .*
➖➖➖➖➖➖➖➖
4. *17 A ,17B என்றும் , தற்கால பணியிடை நீக்கம் (suspension ) நிரந்தர பணி நீக்கம் (dismiss ) என்றும் அரசும்,*

*ஊடகங்களும், நமது நண்பர்களில் சிலரும் மிரட்டியபோதும்  வீரத்தோடும் ,*
*வீரியத்தோடும்*
 *எழுச்சியோடும்* *போராடியுள்ளோம் .*
➖➖➖➖➖➖➖➖➖➖
5.  *நமது மாநில அரசை எதிர்த்துப் போராடிய அதே நேரத்தில் பின்னிருந்து இயக்கும் மத்திய அரசையும் எதிர்த்து உள்ளோம்*
➖➖➖➖➖➖➖➖➖➖
6. *நாம் தான் உண்மையான JACTTO -GEO  என்று நீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது* .
➖➖➖➖➖➖➖➖➖
7. *போராடும் சங்கங்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் தவறுதலாக* (சங்கங்களின் பெயரும் , தலைவர்களின் பெயரும் சரியாக குறிப்பிடவில்லை) *நீதிமன்றத்தில்  தெரிவிக்கப் பட்டுள்ளன* . *இல்லாதவர்களின் பெயர்கள் மனுவிலும் , நீதி மன்ற உத்தரவிலும் குறிப்பிடப்பட்டிருந்தன .*
➖➖➖➖➖➖➖➖➖
*8. பொதுவாக நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்று மன்னிப்பு கோர வேண்டும் அல்லது தண்டனை பெறவேண்டும் .*

 *இவ்விரண்டும் இல்லாமல் நம்மீது தொடரப்  பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  நேரில் வருகை தர தலைமைச் செயலருக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது .*
 *நமது கோரிக்கைகள் சார்ந்து அரசின் அதிகார பூர்வமான கருத்துகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட உள்ளதால் கொடுக்கப் படும் உறுதி மொழிகளை அரசு நிறைவேற்றாத நிலையில் நமக்கு ஆதரவாக நீதிமன்றமே தலையிடும் நிலை ஏற்படும்*

*அமைச்சர் ,முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தைகளில் கூறப்படும் வெற்று உறுதி மொழிகளைவிட இது வலிமையானது .*
➖➖➖➖➖➖➖➖
*9. 9 நாட்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் , மறியல் , காத்திருப்புப் போராட்டம் என அரசை  எதிர்த்தும் , நீதி மன்றத் தடையை மீறியும் போராடியுள்ளோம் .ஆனால் எந்த பாதிப்பும் இல்லாமல் பணியில் சேர்ந்து உள்ளோம் .*
➖➖➖➖➖➖➖➖
*10.  ஒற்றுமையை இறுதிவரை அரசுக்கும், நீதிமன்றத்துக்கு உறுதியுடன் தெரிவித்து உள்ளோம்*
➖➖➖➖➖➖➖➖➖➖
*11. இந்த போராட்டக் களத்தில்  வேலை நிறுத்தம் ,ஆர்ப்பாட்டம் ,மறியல் , காத்திருப்பு போராட்டம் , கைது நடவடிக்கை ஆகியவற்றில் எழுச்சியோடு கலந்து கொண்டவர்களில்  பல்லாயிரக்கணக்கானோர் முதல் முறையாக போராட்டக் களத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .*
➖➖➖➖➖➖➖➖
*12.பெண் ஆசிரியர்/அரசு ஊழியர் மிகப் பெரிய எண்ணிக்கையில் இம்முறை போராட்டத்தில் கலந்து கொண்டது நமது உத்வேகத்தையும் ,உறுதியையும் அதிகரித்து உள்ளது .*
➖➖➖➖➖➖➖➖➖
13. *போராட்டக் களத்தில் கலந்து கொண்டு கைது நடவடிக்கைகளுக்கும் அஞ்சாமல் தங்களது வீரத்தை நாள்தோறும் வெளிப்படுத்திய மாற்றுத் திறனாளிகள் குறிப்பாக பாவையற்ற மாற்றுத்திறனாளிகளின் வீரமும் ,தியாகமும் போற்றுதலுக்கு உரியது.*
➖➖➖➖➖➖➖➖
*இவண்*
➖➖➖➖➖➖➖➖➖
*JACTTO GEO* *திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்;*

*➖➖➖
*சிந்தனை பயணம் தொடரும்.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...