சென்னை: குரூப் 1 மெயின் தேர்வு வருகிற 13ம் தேதி தொடங்குகிறது. தேர்வு கூடத்துக்கு செல்போன், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்ல தடை
விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பணியில் அடங்கிய துணை கலெக்டர் (29 காலிப்பணியிடம்), காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (34), வணிகவரித்துறை உதவி ஆணையர் (8), மாவட்ட பதிவாளர் (1), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (5), தீயணைப்பு மீட்பு பணிகளில் அடங்கிய மாவட்ட அலுவலர் (8) உள்ளிட்ட 85 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான முதல்நிலை எழுத்துத் தேர்வை கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடத்தியது.
இத்தேர்வில் 1,37,855 பேர் கலந்து கொண்டனர்.
இதில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 4602 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 13, 14, 15, ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சென்னை தேர்வு மையத்தில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறுகிறது.