டெலிகம்யூனிகேசன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை: 12க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!!!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் டெலிகம்யூனிகேசன் நிறுவனத்தில் காலியாக
உள்ள 100 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தில்லி

பணி: Engineer

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.20,000

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் ஐடி துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.09.2017 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்சிஏ, பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல் மற்றும் ஐடி துறைகளில் டிப்ளமோ முடித்து 2 அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tcil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 “The Executive Director (IT&HR),
Telecommunications Consultants India Ltd.,
TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi - 110048”

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tcil-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


















SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...