ரேஷன் வாங்க கார்டு தேவையில்லை இனி மொபைல் போன் போதும்!!!

ரேஷன் கடைகளில், கார்டுதாரரின் மொபைல் போன் எண் வாயிலாக, அரிசி, பருப்பு
உள்ளிட்ட பொருட்களை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, ரேஷன் கார்டு கட்டாயம். தற்போது, கார்டு பயன்பாட்டை தவிர்த்து, கார்டுதாரரின் மொபைல் போன் எண் வாயிலாக, ரேஷன் பொருட்களை வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ரேஷன் கார்டில், விற்பனை விபரம், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்படும். தற்போது, ரேஷன் கடையில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. அதன் வழியாக, 'ஸ்மார்ட் கார்டு' பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த கருவியில், கார்டுதாரரின் மொபைல் போன் எண்ணும் பதிவாகியுள்ளது.

இதனால், பொருட்கள் வாங்க, ஸ்மார்ட் கார்டு எடுத்து செல்ல தேவையில்லை. மொபைல் போன் மட்டும் எடுத்து சென்றால் போதும். ஊழியர், அந்த மொபைல் எண்ணை கருவியில் பதிவு செய்ததும், கார்டுதாரரின் மொபைலுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அந்த எண்ணை ஊழியரிடம் காட்டினால், அதை பதிவு செய்து, பொருட்கள் தரப்படும். தற்போது, இந்த சேவையை பெறலாம். இதற்கு, கூடுதல் நேரமாகும். எனவே, அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி முடிந்ததும், மொபைல் எண் வாயிலாக, பொருட்கள் வழங்கும் சேவை அதிகாரபூர்வமாக செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

'ஆதார்' கார்டுக்கு ரேஷன்!

ரேஷன் கடைகளில், கார்டுகளில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின், 'ஆதார்' விபரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்மார்ட் கார்டு, மொபைல் எண்ணை போல், ஆதார் மட்டும் எடுத்து சென்று, பொருட்கள் வாங்கும் சேவையும், விரைவில் துவக்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...