தமிழகம்-புதுச்சேரியில் நவம்பர் 3ஆம் தேதி
வரை 5 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
நவம்பர் 3 வரை கனமழை’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவருகிறது..
சென்னையில் நேற்றுவரை மேகமூட்டதுடன் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்துவருகிறது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், வரும் நவம்பர் 3-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
*இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் நாளை, தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
*அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழகம் மட்டும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், வரும் நவம்பர் 3 வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், ''தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். உள்மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்யும். புதுவையிலும் கன மழை இருக்கும்.
ஆனைக்காரன் சத்திரத்தில் அதிகளவில் இன்று காலை வரை 9 செ.மீ., மழையும், சீர்காழி, நாகப்பட்டினம் 6 செ.மீ., மழையும், சென்னை, காஞ்சிபுரம் 5 செ.மீ., மழையும், திருத்தணி, செங்கல்பட்டு 4 செ.மீ., மழையும், ரெட் ஹில்ஸ், சிதம்பரம், தாம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் 3 செ. மீ மழையும் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே வரும் 3ஆம் தேதி வரை தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளது.
தொடர் மழை எதிரொலி: 1 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழை காரணமாக இன்று மாலை ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.