இந்தியர்களின் வங்கி விவரத்தை ரூ.500க்கு விற்ற கும்பல்: ம.பி., போலீசார் அதிர்ச்சி தகவல்!!!

இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள், மொபைல் எண், இமெயில் ஆகியவை பெயர்
தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

டிக்கெட் முன்பதிவு

மத்திய பிரதேச மாநிலம் இநு்தூரை சேர்ந்த ஜெய்கிஷன் குப்தா என்ற பெண், கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி தனது கிரடிட் கார்டை சிலர் தவறாக பயன்படுத்தி ரூ.72.401 ஐ திருடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஜெய்கிஷன் கார்டு தகவல்களை பயன்படுத்தி மும்பையை சேர்ந்த ராஜ்குமார் பிள்ளை மற்றும் ராம்பிரசாத் நாடார் ஆகியோர், விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விற்பனை

அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், ராஜ்குமார், ஐடி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பதும், ராம்பிரசாத் தனியார் வங்கி முன்னாள் ஊழியர் என்பதும் தெரிந்தது. அவர்கள் கிரெடிட் கார்டு விவரங்களை, சர்வதேச இணையதளங்களில் பயன்படுத்தியதும், அவர்களின் தலைவனாக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் செயல்படுவதும் தெரியவந்தது. இந்த கும்பல் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரடிட் கார்டு விவரங்கள், கார்டு வழங்கிய வங்கி, கார்டு உரிமையாளர்களின் வங்கிக்கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...