கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் உதவித்தொகை வழங்க லஞ்சம்
வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
அரியலூர் மாவட்டம், உடையவர் தீயனூர் கிராமத்தில் வசிப்பவர் மெகருன்னிசா பேகம்.இவர் கணவனால் கைவிடப்பட்டவர். கடந்த 1999ஆம் ஆண்டு உடையவர் தீயனூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த கடம்பூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது உதவியாளர் அம்பலவார்கட்டளை கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் தமிழக அரசின் கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ் வழங்க மனு அளித்திருந்தார்.
0:00
இந்நிலையில், மெகருன்னிசா பேகத்திடம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கணவனால் கைவிடப்பட்டவருக்கான சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.500 லஞ்சமாக கொடுக்க வேண்டுமென கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மெகருன்னிசா, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளர்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி மெகருன்னிசா ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுக்களை சீனிவாசன் மற்றும் கணேசன் ஆகிய இருவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் பெற்ற இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு குறித்த விசாரணை, அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி ரவி, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் அவரது உதவியாளர் கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.