சேலம்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி
மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்துக்கு, ஆண்டுதோறும் எழுத்து தேர்வு நடக்கிறது. குடும்ப வருமானம், 1.5 லட்சத்துக்குள் உள்ள எட்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். அதற்கு, ஏழாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில், குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 2 வரை மாதந்தோறும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு, டிச., 9ல் நடக்க உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், அக்., 23 வரை, தலைமை ஆசிரியர்கள் மூலம், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம், 50 ரூபாயுடன் சமர்ப்பிக்க வேண்டும். அதில், தகுதியுள்ள மாணவர்களை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.