எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணினித் தேர்வு

அனக்காவூர் வட்டார வளமையத்துக்கு உள்பட்ட அரசு நடுநிலை,
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கணினித் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் அறிவுரையின் பேரில், அனக்காவூர் வட்டார வளமையத்தில் மேற்பார்வையாளர் இரா.சக்திவேல் தலைமையில், இந்தத் தேர்வுகள் நடைபெற்றன.
வட்டார கணினி ஒருங்கிணைப்பாளர் தி.இசையருவி வட்டார
ஙஐந-ஒருங்கிணைப்பாளர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரின் மேற்பார்வையில், மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தத் தேர்வுகளில் அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


கணினித் தேர்வில் வெற்றிப் பெற்று முதலிடம் பிடித்த வீரம்பாக்கம் புதூர் அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எஸ். நவீன்ராஜுக்கு ரூ. ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த மடிப்பாக்கம் பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.பாஸ்கருக்கு ரூ. 800-ம், மூன்றாம் இடம் பிடித்த கோவிலூர் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எஸ்.பூபதிராமனுக்கு ரூ. 700-ம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன. பரிசு தொகைகளை அனக்காவூர் தொடக்கக் கல்வி அலுவலர்கள் க.வேலு, டி.ரங்கராஜன் ஆகியோர் வழங்கி, மாணவர்களைப் பாராட்டினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...