தமிழகத்தின் 25வது கவர்னராக பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,6) பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.30 மணியளவில் நடந்த விழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்வரிசையில் ஸ்டாலின்
இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி, அன்பழகன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், தலைமை செயலர், டிஜிபி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாட்டு தூதரக அதிகாரிகள், விழாவில் கலந்து கொண்டனர். கவர்னர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது.
வாழ்த்து
கவர்னராக பதவியேற்ற புரோஹித்திற்கு தலைமை நீதிபதி, முதல்வர், தலைமை செயலர், அமைச்சர்கள், அதிகாரிகள், ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.