பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய பயிற்சியளிக்க முடிவு!!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பயிற்சி பெறாமல்,
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, கட்டாய பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர், உபேந்திரகுஷ்வாஹா, கூறினார்.

பீஹார் மாநிலம், பாட்னாவில், மத்திய அமைச்சரும், லோக் சமதா கட்சி தலைவருமான உபேந்திர குஷ்வாஹா, நேற்று கூறியதாவது: தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என, அரசு முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பயிற்சியின்றி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு, 2015க்குள் பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை. இதையடுத்து, கல்வி உரிமை சட்டத்தில், அரசு, திருத்தம் செய்தது; அதன்படி, பயிற்சியின்றி பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும், தேசிய திறந்தநிலை பள்ளி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 2019, மார்ச்சுக்குள் பயிற்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அவகாசத்துக்குள் பயிற்சி பெறாமல், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், உடனடி யாக பணி நீக்கம் செய்யப்படுவர்.இதற்காக, பாடத் திட்டம் ஒன்றை, தேசிய பள்ளி கல்வி நிறுவனம் தயாரித்துள்ளது. 'ஆன்லைன்' வழியாக, இந்த பயிற்சியளிக்கப்படும். ஆசிரியர்கள், இதற்காக தினமும், மூன்று மணி நேரம் செலவழிக்க வேண்டிஇருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...