கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், தங்களது கணினிகளை தாங்களாகவே ஸ்விட்ச் ஆஃப் செய்கின்றனர்.
எனினும் கம்ப்யூட்டரில் உள்ள டாஸ்க் ஷெட்யூலர் ஆப்ஷன் கொண்டு கணினியை ஷட் டவுன், ரீஸ்டார்ட் அல்லது எவ்வித ஆப்ஷன்களையும் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தச் செய்ய முடியும்.
விண்டோஸ், மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் என எவ்வித கம்ப்யூட்டர்களிலும் ஷெட்யூல் செய்து பூட்-அப், ஷட் டவுன் மற்றும் வேக்-அப் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த அம்சத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
விண்டோஸ்
டாஸ்க் ஷெட்யூலர் எனும் அம்சத்தை கொண்டு விண்டோஸ் இயங்குதளத்தில் பூட்-அப் மற்றும் ஷட் டவுன் நேரத்தை செட் செய்ய முடியும்.
இதனை கமாண்டு மூலமாகவும் செயல்படுத்த முடியும். அந்த வகையில் கம்ப்யூட்டரை ஸ்லீப், ஷட் டவுன் அல்லது வேக் -அப் செய்வதற்கான கமாண்ட்களை கீழே காணலாம்.
ஷட் டவுன் (Shut Down): shutdown.exe -s -t 00
ஹைபர்நேட் (Hibernate): rundll32.exe powrprof.dll,SetSuspendState
ஸ்லீப் (Sleep): rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
டாஸ்க் ஷெட்யூலர் மூலம் செயல்படுத்துவது எப்படி?
வழிமுறை 1: முதலில் ஸ்டார்ட் மெனு சென்று டாஸ்க் ஷெட்யூலர் 'task scheduler' ஆப்ஷனை கிளிக் செய்து ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
வழிமுறை 2: வலது புறத்தில் காணப்படும் கிரியேட் டாஸ்க் 'Create Task' ஆப்ஷனை கிளிக் செய்து, ரன் வித் ஹையஸ்ட் பிரிவிலிஜஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் பயனர் லாக் இன் செய்யும் போது செயல்படுத்த வேண்டுமா அல்லது லாக் அவுட் செய்திருக்கும் போது செயல்படுத்த வேண்டுமா என்பதை சரிபார்க்க வேண்டும்.
வழிமுறை 3: இனி செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று 'Stop the task if it runs longer than' ஆப்ஷனில் கிளிக் செய்து நேரத்தை ஒரு மணி நேரத்தில் செட்செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது டாஸ்க் செயல்படுத்தப்படுவதை அறிந்து கம்ப்யூட்டர் தானாக நின்று விடும்.
வழிமுறை 4: இனி ஆக்ஷன்ஸ் டேப் சென்று ஸ்டார்ட் எ புரோகிராம் 'Start a Program' ஆப்ஷனை கிளிக் செய்து புரோகிராமினை ஷட் டவுன் செய்யக்கோரும் வகையில் செட் செய்து ஆர்குமென்ட்ஸ் ஆப்ஷனை -s ஆக செட் செய்ய வேண்டும்.
வழிமுறை 5: அடுத்து டிரிகர்ஸ் டேப் சென்று புதிய இயக்கத்தை தேர்வு செய்ய வேண்டும். இனி உங்களுக்கு ஏற்ற நேரத்தை கிளிக் செய்து அதனை உறுதி 'Ok' செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
மேக் ஓ.எஸ்.:
மேக் ஓ.எஸ். இயங்குதளத்தில் சிஸ்டம் பிரஃபரன்ஸ் ஆப்ஷில் உள்ள எனர்ஜி சேவர் ஐகானை கிளிக் செய்து ஷெட்யூல் பட்டனை கிளிக் செய்து மேக் வேக்-அப் அல்லது ஸ்டார்ட்-அப் ஆக வேண்டிய நேரத்தை குறிப்பிட முடியும். இதே ஆப்ஷன் கொண்டு ஷட் டவுன், வேக்-அப் மற்றும் பல்வேறு அம்சங்களை ஷெட்யூல் செய்ய முடியும்.
லினக்ஸ்:
லினக்ஸ் இயங்குதளத்தில் rtcwake எனும் கமாண்ட் கம்ப்யூட்டரில் வேக்-அப், ஸ்லீப், ஹைபர்நேட், ஷட் டவுன் உள்ளிட்டவற்றை செட் செய்ய முடியும். இதே கமாண்ட் அதற்கேற்ற இயக்கத்தை குறிப்பிட்டு வெவ்வேறு அம்சங்களை ஷெட்யூல் செய்ய முடியும்.