மின்சாரம், தொலைபேசி உட்பட அரசு அமைப்புகளுக்கு நிலுவை வைத்து உள்ளவர்கள் தேர்தலில்
போட்டி இடுவதை தடுக்கும் தேர்தல் கமிஷனின் பரிந்துரையை, மத்திய அரசு நிராகரித்தது.
தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங் களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 'தேர்தலில் போட்டியிடுவதற்கு, அரசு வீடுகளுக்கான வாடகை, மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட கட்டணங்கள் பாக்கி இல்லை என்ற, தடையில்லா சான்றிதழ்களை அந்தந்த துறைகளிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.
அனுமதி மறுப்பு
கடந்த, 2014ல், ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய, டில்லி உயர் நீதிமன்றம், 'அரசு துறைகளுக்கான நிலுவையை வசூலிக்கும் வகையில், நிலுவை வைத்து உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றி ஆராய வேண்டும்' என, கூறி இருந்தது.அந்த தீர்ப்பின் அடிப்படை யில், 'அரசு
துறைகளிடம் இருந்து, எந்த நிலுவையும் இல்லை என்ற சான்றிதழை, தேர்தலில் போட்டி இடும் போது விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.
இதை நடைமுறைபடுத்துவதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்காக, இந்த பரிந்துரையை,மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் அனுப்பியிருந்தது.
சான்றிதழ்
இது குறித்து ஆராய்ந்த, மத்திய சட்டக் கமிஷன், 'தேர்தல் கமிஷனின் பரிந்துரை தேவையில்லாத ஒன்று' என, பதில் அனுப்பியுள்ளது.இது குறித்து சட்ட அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து நிலுவை ஏதுமில்லை என்ற சான்றிதழ் வாங்கி சமர்ப்பிப்பது, தேவையில்லாத குழப்பத்தையே உருவாக்கும். அரசியல் காரணங்களுக்காக, சிலருக்கு இந்த சான்றிதழ் மறுக்கப்படலாம்.
சில நேரங்களில், இந்த நிலுவைத் தொகை தொடர்பாக சர்ச்சை இருந்தால், அதில் முடிவு ஏற்படும் வரை, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகிவிடும்.இது தேவையில்லாத
அரசியல் குழப்பங்களுக்கும், லஞ்சத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்து விடும். அதனால், தேர்தல் கமிஷனின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கட்சிகள் ஆதரித்தால் ஒரே நேரத்தில் தேர்தல்
''சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை,'' என, மத்திய தேர்தல் கமிஷனர், ஓ.பி.ராவத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:சட்டசபை மற்றும் லோக்சபா வுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.
அதே நேரத்தில், இதற்காக அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங் களில் திருத்தம் செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தால், ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தயாராக உள்ளோம்.அதற்கு முன்னதாக, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்து வதற்கு தேவையான வசதிகளை உருவாக்கிட வேண்டும். மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங் கள் தேவையான அளவுக்கு வாங்கப்பட வேண்டும். வரும், 2019 லோக்சபாவுக்கு முன், இவை வாங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் கூறினார்.
வீண் செலவுகளையும், நேரம் வீணாவதையும் தடுக்கவும், லோக்சபா,சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என, அரசுக்கு ஆலோசனை கூறும், 'நிடி - ஆயோக்' அமைப்பு, ஏற்கனவே கூறியிருந்தது; இதற்கு, பிரதமர் நரேந்திர மோடியும் ஆதரவு தெரிவித்திருந்தார்