ஆதரவு அளித்த, எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு, ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தவிடுபொடி,
சின்னம் விவகாரத்தை இழுத்தடிக்க போட்ட திட்டம் தோல்வி என, அடி மேல் அடி விழுவதால், சசிகலா, தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய, தேர்தல் கமிஷன், இன்று விசாரணையை துவக்குகிறது. இதற்காக, அ.தி.மு.க., அணிகள், டில்லி சென்றுள்ளன.
ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது. அ.தி.மு.க., என்ற பெயரை பயன் படுத்தவும், தடை விதிக்கப்பட்டது. இழந்த சின்னத்தையும், கட்சி பெயரையும் மீட்க, பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணிகள் சார்பில், தேர்தல் கமிஷனில், லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பினரும், தங்களுக்கே சின்னம் ஒதுக்கும்படி முறையிட்டனர்.
இதற்கிடையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் உருவான புதிய அணியுடன், பன்னீர் அணி இணைந்தது.இவர்கள் தரப்பில், மீண்டும் தேர்தல் கமிஷனில், சின்னம் கேட்டு முறையிடப்பட்டது. எனவே, இந்த வழக்கை
முடித்து வைக்க, அனைத்து தரப்பினரும், போதிய ஆவணங்களை, செப்., 29க்குள் தாக்கல் செய்யும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அதை ஏற்று, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில், மேலும் பலஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.அ.தி.மு.க., அணிகள் இணைந்ததற்கான சான்றுகள், இரு அணிகள் இணைந்த பின் நடந்த பொதுக்குழு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவையும், தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப் பட்டன.
ஜெ., மறைந்த போது, பொது குழு உறுப்பினர்களாக இருந்தவர்களிடம், புதிதாக பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு ஒப்படைக்கப் பட்டன. அதில், 'பிளவுபட்ட கட்சி இணைந்து உள்ளதால், அ.தி.மு.க., என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, துணை பொதுச்செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தினகரன் சார்பிலும், இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சிக்கு உரிமை கோரி, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், ஜெ., அண்ணன் மகள் தீபாவும், உரிமை கோரி மனு செய்தார்.
இவர்களுக்கு இடையில், பன்னீர்செல்வம் அணியிலிருந்த, முன்னாள் எம்.பி., பழனிசாமி, 'அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது. பொதுச்செயலர், கட்சி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். கட்சி விதிகளில் மாற்றம் செய்ய கூடாது' என, தனியாக ஒரு மனுவை, தேர்தல்
கமிஷனில் சமர்ப்பித்தார்.இவற்றின் மீதான விசாரணையை, தேர்தல் கமிஷன், இன்று துவக்குகிறது.
இதில் பங்கேற்பதற்காக, அ.தி.மு.க., பன்னீர் அணியில் இருந்த, எம்.பி., மைத்ரேயன், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர், நேற்று காலை, டில்லி புறப்பட்டு சென்றனர். அவர்களுடன், முதல்வர் பழனிசாமி தரப்பில், அமைச்சர், சி.வி.சண்முகமும் டில்லி சென்றுள்ளார்.
மேலும், அமைச்சர்கள், உதயகுமார், ஜெயகுமார் ஆகியோர், இன்று காலை, டில்லி செல்ல உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து, ஒருங்கிணைந்த, அ.தி.மு.க., என்ற பெயரில், விசாரணையில் பங்கேற்கின்றனர்.இதற்கிடையில், சின்னம் தொடர்பான வழக்கில், தினகரன் தரப்பில், ஆவணங்கள் தாக்கல் செய்யாமல், மூன்று வாரம் அவகாசம் கேட்கப்பட்டது. அதை, தேர்தல் கமிஷன் நிராகரித்து விட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை இழுத்தடிக்க, கூடுதல் அவகாசம் தரக் கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தினகரன் தரப்பினர் மனு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நேற்று தள்ளுபடி செய்தனர்.தினகரனுக்கு ஆதரவு அளித்த, எம்.எல்.ஏ.,க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்ற, தினகரன் கனவும் நனவாக வில்லை. இப்படி அடி மேல் அடி விழுவதால், சசிகலா, தினகரன் தரப்பினர்,கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.