'108' ஊழியருக்கு போனஸ் எவ்வளவு? இன்று பேச்சுவார்த்தை!!!

சென்னை: அவசர கால, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து,
இன்று(அக்.,6), நிர்வாகம் பேச்சு நடத்துகிறது.

தமிழகத்தில், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் சேவையில், 923 வாகனங்கள் உள்ளன; 4,300 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 25 சதவீத போனஸ் கேட்டு, இன்று, 'ஸ்டிரைக்' நடத்தப் போவதாக, ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.ஆனால், '108' சேவை நிறுவனம் பேச்சு நடத்த அழைப்பு விடுக்காததால், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்று காலை, போனஸ் குறித்து பேச்சு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் கலைந்து சென்றனர். பேச்சில், சுமுக தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...