பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஜெயலலிதா
மரணத்தில் உள்ள மர்மம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று (அக்டோபர் 25) தொடங்குகிறார்.
உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர். கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவிலிருந்து தனி அணியாகப் பிரிந்த பன்னீர்செல்வம், ‘அணிகள் இணைவதற்கு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையைப் பிரதானமாக முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து இரு அணிகளையும் இணைக்கும்பொருட்டு கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ஜெயலலிதா மர்ம மரணத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து விசாரணை ஆணையத்தின் தலைவராக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை எழிலகத்தில் விசாரணை அதிகாரியாக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்ட ஆறுமுகசாமிக்கு, எழிலகத்தில் பிரத்யேகமாக தனி அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை நடைபெறும்போது பேசும் உரையாடல் வெளியில் கேட்கக் கூடாது என்பதற்காகச் சிறப்பு வடிவமைப்புடன் அந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி இன்று தன்னுடைய விசாரணையை தொடங்குகிறார். விசாரணையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதா தங்கியிருந்த அறை ஆகியவற்றை பார்வையிடும் அவர், அப்போலோ மருத்துவமனைக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம் என்று கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் பல்வேறு அமைச்சர்களையும் விசாரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.