பிரேசில் நாட்டில் உள்ள நர்சரி பள்ளி ஒன்றில் காவலாளி வைத்த
தீயில் ஒரு ஆசிரியர், நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் மினாஸ் ஜெனரல் மாகாணம் ஜனவுபா நகரில் நர்சரி பள்ளி ஒன்று உள்ளது. அதில் ஏராளமான குழந்தைகள் படித்துவருகின்றனர். நேற்று (அக்டோபர் 05) அந்தப் பள்ளியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் குழந்தைகள், ஆசிரியைகள், அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருந்தும் 4 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியை உடல் கருகி இறந்துள்ளனர். மேலும் 25 குழந்தைகள் உடல்கருகி தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் 4 முதல் 5 வயதுக்குட்பட்டவர்கள்.
தீவிபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பள்ளியின் காவலாளி டாமியோ சோர்ஸ் தோஸ்சாண்டோவ் (50) என்பவர் பள்ளிக்கு தீவைத்தது தெரியவந்துள்ளது. அவரும் தீயில் சிக்கி உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் பள்ளிக்கு தீவைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. உடல் நிலை சரியில்லை என அவரை வேலையில் இருந்து பள்ளி நிர்வாகம் நீக்கி விட்டது. இதனால் அவர் பள்ளிக்கு தீவைத்து இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
இந்தத் துயர சம்பவத்துக்கு பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் டுவிட்டரில் இது வேதனைக்குரிய மிகப்பெரிய இழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார்