தேர்தல் முறைகேட்டைத் தவிர்க்கப் புதிய இயந்திரம்!

அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் நாடாளுமன்ற, சட்டமன்றத்
தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் பயன்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்குகள் விழுவதாகவும் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்தன. இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ‘விவிபாட்’ என்னும் இயந்திரம் தேர்தலின்போது பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் நேற்று (அக்டோபர் 1) அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இந்த ‘விவிபாட்’ இயந்திரம் இணைக்கப்பட்டு வாக்காளர் வாக்களித்தவுடன் வாக்களித்த கட்சி சின்னத்துடன் அச்சிட்ட தாள் ஒன்று வெளியேவரும். அதை வாக்காளர் உறுதிசெய்த பின், அந்த ஒப்புகைச் சீட்டு வெளியில் கொண்டு செல்லப்படாமல் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் கடந்த முறை நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலின்போது இக்கருவி ஒரு சில தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...