நாடு முழுவதிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
கடந்த ஒன்பது மாதங்களில் 34 மடங்கு அதிகரித்துள்ளது. இதில் குஜராத், மகாராஷ்டிரா, உ.பியைத் தொடர்ந்து தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
பன்றிக் காய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு 1,873 பேர் இறந்துள்ளதாகவும், 35,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உயிரிழப்பு 9 மடங்கும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 மடங்கும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநரான ஏ.கே. தாரிவால் கூறும்போது, “ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எச்1என்1 வைரஸ் எளிதாகப் பரவும். பண்டிகை காலத்தில் ஏற்படும் மக்கள் நெரிசலால் இந்த வைரஸ் அதிகம் பரவுகிறது. குறிப்பாக தற்போது நடந்து முடிந்த தசரா, துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,000 அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே இதற்கு முக்கிய காரணம்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் வரை பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 7,300 பேருடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து 5,388 பேருடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், 3,782 பேருடன் உ.பி. மூன்றாம் இடத்திலும் உள்ளன. 3,173 பேருடன் தமிழகம் நான்காவது இடத்திலும் 3,141 பேருடன் கர்நாடகா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கையில் 595 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாம் இடத்திலும் (428), ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும் (202), உ.பி. நான்காம் இடத்திலும் (122) உள்ளன. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தெலங்கானாவில் 18, ஆந்திராவில் 14, கர்நாடகாவில் 15 என உள்ளது.
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ம.பி., ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.