லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த... தயார்!!!

நேரம், பண விரயத்தை தவிர்க்கும் வகையில், லோக்சபா மற்றும் மாநிலசட்டசபை
தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. செப்., 2018ல், இதை சாத்தியமாக்க தயாராக இருப்பதாக, தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.இதனால், விரைவில், லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்தப்படுவதற்கானவாய்ப்பு அதிகரித்துள்ளது.
லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல்கள், தனித் தனியாக நடத்தப்படுவதால், மக்களின் வரிப் பணம், கோடிக்கணக்கில் செலவாகிறது; மேலும், தேர்தல் நடத்தப்படுவதற்கான முன் னேற்பாடுகளால்,கால விரயமும் ஏற்படுகிறது. ஓட்டளிக்கும் மக்கள், தங்கள் தொகுதிக்கான, லோக்சபா, சட்டசபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க, வெவ்வேறு காலத்தில், ஓட்டளிக்கும் நிலை உள்ளது.



0:00

இது போன்ற சிரமங்களை தவிர்க்கவும், அரசுப் பணம் வீணாவதை தடுக்கும் வகையிலும், லோக்சபா, மாநில சட்டசபைகளுக்கான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என, சமூகஆர்வலர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், லோக்சபா, சட்டசபைகளுக்கான தேர்தலை, ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷனிடம், மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு கருத்து கேட்டுள்ளது. மத்திய அரசு சட்ட திருத்தம் செய்தால், செப்., 2018ல், இதை சாத்தியமாக்க தயாராக இருப்பதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதனால், விரைவில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற் கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில், 2019 மார்ச் அல்லது ஏப்ரலில் தான், லோக்சபா தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே, லோக்சபா தேர்தலை நடத்த, பா.ஜ., தலைமை யிலான மத்திய அரசு விரும்புவதாக கூறப்படு கிறது.இரு வகை தேர்தல்களையும், ஒரே நேரத்தில் நடத்த தயார் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள தால், பார்லிமென்டில், விரைவில் இது குறித்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் நபராக ஆதரவு!:

லோக்சபாவுக்கும், சட்டசபைகளுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, முதல் ஆளாக, லோக்சபா துணை சபாநாய கரும், அ.தி.மு.க., மூத்த தலைவருமான, தம்பிதுரை ஆதரவு தெரிவித்து உள்ளார்.இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்; அதுவும், 2019 முதல், அந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும். பள்ளித் தேர்வுகளுக்கு இடையூறு இல்லாத வகையில், 2019 பிப்., இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தை, தேர்தலுக்கான கால அட்டவணையாக அறிவிக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

இரு வகை தேர்தலையும், ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருப்பதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது குறித்து, பா.ஜ., உள்ளிட்ட எந்த கட்சியும் வாய் திறக்காத நிலையில், நாட்டிலேயே முதல் நபராக, தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்பிதுரை கடிதத்தின் பின்னணி என்ன?

தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி, 2021ம் ஆண்டு வரை நீடிக்கலாம். முழு பெரும்பான்மையுடன் அமைந்த அரசு, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஏற்பட்ட குழப்பங்களால், ஆடிப்போய் கிடக்கிறது. ஆனாலும், அரசு கவிழ்வதை, அ.தி.மு.க.,வில் உள்ள யாரும் விரும்பவில்லை. மீதமுள்ள முழு பதவிக்காலத்தையும், அனுபவித்துவிட துடிக்கின்றனர்.

லோக்சபாவுக்கு நடக்கும் தேர்தலுடன் சேர்த்து, தமிழகத்துக்கும் தேர்தல் நடத்தும்படி, தம்பிதுரை கேட்டிருப்பது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஏற்கனவே, பொதுச் செயலர் பதவிக்கு அவர் ஆசைப்பட்டார் என்ற தகவல் உண்டு. முதல்வர் பதவிக்கான போட்டியின் போது, பன்னீர் செல்வத்துக்கு எதிராக பகிரங்கமாகவே செயல் பட்டார். தமக்கு ஒரு வாய்ப்பை, சசிகலா தருவார் என எதிர்பார்த்து, கடைசி வரைஅவருக்கு
ஆதரவாக செயல்பட்டும் வந்தார்; எதுவும் நடக்க வில்லை.

தற்போது, 2021 வரை நீடிக்க வேண்டிய பழனிசாமியின் ஆட்சியை, முன் கூட்டியே முடிவுக்கு கொண்டுவர, தம்பிதுரை விரும்புகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. சசிகலாவை பகிரங்கமாக எதிர்த்து பேசாமல், நழுவியபடியே உள்ள மூத்த தலைவர்களில் முக்கியமானவர் தம்பிதுரை.தம்பிதுரை மூத்த அரசியல்வாதி. இறுதியில் வெற்றி பெறுகிறாரோ, இல்லையோ, எதையும் காரணம் இன்றி இதுவரையில் அவர் பேசியதும் இல்லை; செய்ததும் இல்லை.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்ட திருத்தம் தேவை!

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த, தேர்தல் கமிஷனர், ஓ.பி.ராவத் கூறியதாவது:லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம், பெருமளவு பொருட்செலவை குறைக்க முடியும்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில், இரு வகை தேர்தல்களையும் நடத்த, 40 லட்சம்,மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். இதற்காக, 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியும் வகையில், ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரமும், 'ஆர்டர்' செய்யப்பட்டு உள்ளது.

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து, புதிய இயந்திரங்கள் வரத் துவங்கியுள்ளன. விரைவில், 40 லட்சம் இயந்திரங்கள்,தேர்தல் கமிஷன் வசம் இருக்கும் என்பதால், செப்., 2018ல், லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியும்; இது குறித்து, மத்திய அரசு தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய நிலையில், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும்திரிபுரா ஆகிய, ஏழு மாநிலங்களில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...