உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை,
6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருந்துகள் விலையை நிர்ணயிக்கும், என்.பி.பி.ஏ., எனப்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதயநோய், புற்று நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் உட்பட உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பை, மருந்து விற்பனை நிறுவனங்கள் ஏற்று, மருந்துகளின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். உதாரணமாக நெஞ்சு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படும், 'அல்டிபிளாசி' விலை, 28 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்தும், 15 உயிர்காக்கும் மருந்துகளின் விலையை மாற்றி அமைத்தும் என்.பி.பி.ஏ., அறிவித்துள்ளது.
பொதுமக்களில் ஒருவரான தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் பெ.சாந்தியிடம் கேட்டதற்கு, இந்த விலை குறைப்பு வரவேற்கக்கூடியது. பொதுவாக உயிர் காக்கும் முக்கியமான மருந்துகளின் விலை குறைப்பு என்பது அனைத்து மக்களுக்கும் பயன்படும். இதனால் நிறைய பொதுமக்கள் பயன்பெறுவார்கள். குறிப்பாக மருந்துகள் வாங்கும் அளவிற்கு போதிய பணம் இல்லாமல் கஷ்டத்தில் வாழும் மக்களுக்கு மருந்துகளின் விலை குறைப்பு மகிழ்ச்சியைத் தரும் என்கிறார், சாந்தி.