புதுடெல்லி: நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் 2017-18ம் நிதியாண்டுக்கான
வருமான வரி ரிட்டன் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வரும் 7ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கைக்கு உட்படுத்த வேண்டிய நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், தனிநபர் நிறுவனங்கள் வருமான வரி ரிட்டனை செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் 2வது முறையாக கால அவகாசம் வரும் 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்துறை நேற்று அறிவித்தது.