பெண் குழந்தை பிறந்தால் தங்க நாணயம்!!!!

பெண் குழந்தைகள் பிறந்தால் ஒரு கிராம் தங்க நாணயம்
பரிசாகக் கொடுக்கும் வழக்கத்தைக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் செயல்படுத்திவருகிறார்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், கோட்டக்கல் நகராட்சி கவுன்சிலர் அப்துல் ரஹ்மான். இவர் தன் வார்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயத்தைப் பரிசாக அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறார்.

“எந்த மதமாக இருந்தாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், நடைமுறை அதற்கு எதிராகத்தான் உள்ளது. பெண் குழந்தைகளை பாரமாகப் பார்க்கும் நிலை, இன்றும் உள்ளது. இந்த நிலையை மாற்றும் ஒரு சிறிய முயற்சியாக, என்னுடைய வார்டில் பிறக்கும் பெண் குழந்தைக்கு, ஒரு கிராம் தங்க நாணயத்தைப் பரிசாக அளித்துவருகிறேன்” என இது குறித்து அப்துல் ரஹ்மான் கூறியிருக்கிறார்.

பல தங்க நகைக் கடைகள் இதற்கு நன்கொடை வழங்க முன்வந்ததாகவும் ஆனால், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். “என்னுடைய சொந்த செலவிலேயே இந்தப் பரிசை அளித்துவருகிறேன். இதுவரை, 16 குழந்தைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...