15 கோடி ஆண்டுகள் பழைமையான உயிரினம்!

அன்டார்டிகாவில் உள்ள கடல் பகுதியில் 15 கோடி ஆண்டுகள் பழைமையான
நீர்வாழ் உயிரினத்தின் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 40 அடி நீளமுள்ள இந்த உயிரினம் டைனோசர் வகையைச் சார்ந்தது என்றும் அதில் தெரிவித்துள்ளனர். ஜோஸ் பெட்ரிகோ என்ற முன்னணி ஆராச்சியாளர் அன்டார்ட்டிகாவில் உள்ள மரம்பியா பேஸ் என்ற இடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் பயணித்த பிறகு வியக்கத்தக்க ஒரு காட்சியைக் கண்டறிந்துள்ளனர். அதில் டைனோசர் வகை நீர்வாழ் உயிரினத்தின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.



இதற்கு முன்னர் எட்டு கோடி ஆண்டுகள் பழைமையான உயிரினம் கண்டறியப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. இந்த உயிரினம் குறைந்த அளவு ஆக்சிஜனை உட்கொண்டு கடலின் ஆழத்தில் வாழ்ந்து வந்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...