பயிற்சி மையத்தைத் தொடங்கும் அண்ணா பல்கலை!

பொறியியல் மாணவர்கள் எளிதாகத் தேர்வுகளை எதிர்கொள்ளும்
வகையில் அண்ணா பல்கலை பயிற்சி மையத்தை அமைத்துள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் ஆகியவற்றில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைச் சேர்ந்த முன் இறுதி ஆண்டு மாணவர்கள் 240 பேருக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்தப் பயிற்சி வகுப்புகள் விடுமுறை நாள்களில் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகளைப் பல்கலையின் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஇஎஸ் (IES) அதிகாரிகள் இலவசமாக நடத்துவார்கள்.

தமிழ்நாட்டில் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் அறிவியல் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்கள்தான் நிர்வகிக்க வேண்டும். அதன்படி, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகித்து வருகிறது. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் பி.இ., பி.டெக் படிப்புகளில் சுமார் 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. உயர் கல்வித்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...