புதிய திட்டங்களுடன் வோடஃபோன்!

ரிலையன்ஸ் ஜியோவுடனான
போட்டியை வலுப்படுத்தும் வகையில், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 79 ரூபாய் முதல் 509 ரூபாய் வரையிலான ஐந்து புதிய திட்டங்களை வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வோடஃபோன் இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டாரத் தலைவர் முரளி கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்தே எங்களது நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அனைத்து வகையான வாடிக்கையாளர்களும் பயனடையும் வகையில் தற்போது புதிதாக சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரூ.79 திட்டத்தில், 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ஏழு நாள்களுக்கு 500 எம்.பி அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். இச்சலுகை 2ஜி/3ஜி/4ஜி மொபைல்போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் என்று வோடஃபோன் கூறியுள்ளது. இச்சலுகையில் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்பு வசதி, குறுஞ்செய்தி சேவைகளுக்கு ரூ.25 பைசா என்றும் அறிவித்துள்ளது.

ரூ.199 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் 28 நாள்களுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். ரூ.347 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி. அளவிலான டேட்டா என, 28 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். ரூ.459 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டா என 70 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டா என 84 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். மேற்கூறிய சலுகையில் வரம்பற்ற லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு வசதிகளும், இலவசமாகத் தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...