ராஞ்சி: சட்டசபை வளாகத்திற்குள் மதுக்கடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பா.ஜ.,வின் ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். மாநிலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தும் வகையில் தற்போது மாநிலத்தில் உள்ள மது கடைகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே மது பானங்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எம்.எல்.ஏக்கள் மாநில அரசு கடைகள் ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதால் மது வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்னைகளும் கைகலப்புகளும் உருவாகும். தற்போது குளிர் காலம் துவங்க இருப்பதால் நீண்ட வரிசைகள் காணப்படும்.
சட்டபை வளாகத்திற்குள் மதுபானக்கடை
இது போன்ற பிரச்னைகளை தீர்க்கும் வகையில் சட்டசபை வளாகத்திற்குள் மதுபான கடையை திறக்க வேண்டும். வரும் 12-ம் தேதிசட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. அப்போது தங்களின் இந்த விருப்ப தேவை குறித்து முதல்வர் ரகுபர் தாஸிடம் கொண்டு செல்லுமாறு சபாநாயகர் தினேஷ் ஓரானை சந்திக்க முடிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏக்களின் இந்த கோரிக்கைக்கு முக்கிய எதிர்கட்சியான ஜார்கண்ட் முகதி மோர்ச்சா ஆதரவளித்துள்ளது.