மருத்துவ மாணவர்களின் 'தூக்கு' போராட்டம்!!!

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
மூலம், புதிய அரசு சாரா மருத்துவர்களை நேரடியாக அரசு மருத்துவக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, மதுரை மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவ மாணவர்கள் நேற்று (டிசம்பர் 2) ஆறாவது நாளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் போராட்டத்தை நடத்தி, அரசுக்கு உணர்த்தி வரும் மாணவர்கள் தூக்கில் தொங்குவதுபோல் தங்கள் போராட்டத்தை நடத்தினர்.

தனியார் கல்லூரிகளில் படித்துவிட்டு எந்த ஒரு பணி அனுபவமும் இல்லாதவர்களை நேர்முகத் தேர்வு மூலமாக அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்துவது தவறானது. முதலில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு நேர்முகத் தேர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கவில்லை. அதில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் கூறினார்கள்.

இந்தப் போராட்டத்தில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் வரையில் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாகச் சென்றவர்கள், நேற்று முன்தினம் மனிதச்சங்கிலி அமைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 250-க்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...