நிதி தீர்மானம் மற்றும்
வைப்புத்தொகை காப்புறுதிச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மத்திய நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் முடங்கும் சூழல் உருவானால் அந்நிறுவனங்களில் பொதுமக்கள் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கும் சட்டம் தான் இந்த நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்டம். ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட இச்சட்டமானது பாராளுமன்றக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே இதற்கு எதிராகப் பொதுமக்களிடமும் எதிர்க்கட்சியினரிடம் பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது. மக்களின் பணத்துக்கு ஆபத்து விளைவிக்கும் சட்டமாக இது உள்ளது என்ற புகார்கள் பெருமளவில் எழுந்துள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வரும் அனைத்திந்திய திரினாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மம்தா பானர்ஜி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் ஏழை எளிய மக்களின் நிதிப் பாதுகாப்புக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் தான் இந்த நிதி தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதிச் சட்டம். இதனால் வங்கித் துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை முழுமையாகத் தகர்ந்து விடும். கடன் பிரச்னைகளால் தத்தளித்துக்கொண்டிருக்கும் வங்கித் துறையை மீட்டெடுப்பதற்கு அரசு தனது மூலதனங்களைப் பயன்படுத்தாமல் மக்களின் பணத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது. இச்சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.