100, 101, 108 இனி ஒரே எண்ணில்!

அவசர போலீஸ் எண் 100, தீ அணைப்பு சேவை எண் 101, ஆம்புலன்ஸ் சேவை எண் 108,
ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரே எண்ணில் அழைப்புகளைப் பெற்று சேவைகளை வழங்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
அவசர போலீஸ் எண் 100 பல மாவட்டங்களில் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே வேலை செய்தாலும், கடலூர் விலாசத்தில் உள்ள சிம்கார்டிலிருந்து சென்னையில் 100க்கு கால் செய்தால், கடலூர் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்கிறது. இல்லையென்றால் தற்போது உபயோகத்தில் இல்லை என்ற ரெக்கார்டிங் வாய்ஸ் வருகிறது.
100க்கு தகவல் கொடுத்தால் உடனே சம்பவ இடத்திற்கு விரைகிறார்களா அல்லது போகாமலே போனதாக பொய் சொல்கிறார்களா?, என்பதைக் கண்காணிக்க புதிய தொழில் நுட்பத்தை தமிழக காவல்துறை. விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
பி.சி.ஆர் விங்க், காவல் கட்டுப்பாட்டு அறை (போலீஸ் கண்ட்ரோல் ரூம்) அறிமுகம் செய்வதற்கு மாவட்டம், மாநகரக் காவல் துறையினருக்குச் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.108 ஆம்புலனஸ் சர்வீஸ் போல், காவல்துறையில் 100 சேவையைச் சென்னையிலிருந்து செயல்படுத்த உள்ளனர்.
அதற்காக ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் பொருத்திய 1400 ஜீப்கள் முதல்கட்டமாக வாங்க தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் எங்கிருந்து, எண் 100க்கு டயல் செய்தாலும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் ரிசிவ் செய்து, புகாரின் தன்மை, இடம், அருகில் உள்ள காவல் நிலையத்தின் தூரம், மாவட்டம், தகவல் கொடுப்பவரின் தொடர்பு எண், பெயர் போன்ற விபரங்களைச் சேகரித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுப்பார்கள்.
மாவட்டக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சம்பவம் இடத்துக்கும் அருகில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ், பொருத்திய ஜீப்புடன் உள்ள போலீஸை போகச்சொல்வார்கள், ”அந்த ஜீப் போவதை, சென்னையிலிருந்து கண்காணிப்பார்கள் எந்த இடம், எவ்வளவு நேரத்தில் அங்கு சென்றார்கள் என்று. ஸ்பாட்டிலிருந்து ரிப்போர்ட் கொடுக்கவேண்டும், அதன் பிறகு நடவடிக்கைகள் பற்றி ஆன்லைனில் முழு விபரங்கள் கொடுக்கவேண்டும். இதே சர்வீஸை ஆம்புலன்ஸ் மற்றும் தீ அணைப்பு சேவைக்கும் பயன்படுத்தத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக காவல்துறையினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...