1.56 லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவு வெளியீடு!!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள், நேற்று
வெளியாகின. 1.56 லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் மதிப்பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
சேலம் பெரியார் பல்கலை நிர்வாகத்தின் கீழ், சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 95 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தருமபுரி முதுநிலை விரிவாக்க மையம் மற்றும் பெரியார் பல்கலை துறைகளில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கான பருவத்தேர்வு, கடந்த நவம்பர் மாதத்தில் நடந்தது. தேர்வுமுடிவுகளை நேற்று காலை, பெரியார் பல்கலை தேர்வாணையர் லீலா வெளியிட்டார். பல்கலை இணையதள வெளியீடு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும், எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பும் சேவையினை தொடங்கி வைத்தார்.
இதில், இளநிலை பயிலும், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 500 மாணவர்கள், முதுநிலைக் கல்வி பயிலும், 18 ஆயிரம் மாணவர்கள், பல்கலை துறைகள் மற்றும் தருமபுரி முதுநிலை விரிவாக்க மையத்தில் பயிலும், 2,500 மாணவர்கள் என, மொத்தம், ஒரு லட்சத்து, 56 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்பட்டன.
இதுகுறித்து தேர்வாணையர் லீலா கூறியதாவது
விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கல்லூரி மாணவர்கள், தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வர் வாயிலாகவும், பல்கலை துறைகளில் பயிலும் மாணவர்கள், துறைத்தலைவர் வாயிலாகவும், தேர்வாணையர் அலுவலகத்திற்கு, ஜனவரி, 12க்குள்ல விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மறுமதிப்பீட்டிற்கு, 250 ரூபாய், விடைத்தாள் நகலுக்கு, 250 ரூபாய், மறுகூட்டலுக்கு, 200 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், துணைத் தேர்வாணையர் செந்தில்வேல்முருகன், துணைப் பதிவாளர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...